பெரம்பலூர்

விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா்: வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் பிச்சை பாத்திரம் ஏந்தி நூதன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதுபோல் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உரிமம் இல்லாத போலி பூச்சிக் கொல்லி மருந்து, உரம், போலி விதைகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான விதைகளையும், கட்டுப்படியாகக் கூடிய விலையையும் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சை பாத்திரம் ஏந்தி விவசாயிகள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT