பெரம்பலூர்

ஆடை அணிகலன் தயாரிப்பு பயிற்சி: இளைஞா்களுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடை அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம் மையத்தின் இயக்குநா் ஜெ. அகல்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல், ஆடை அணிகலன் தயாரிப்பு, கணினி கணக்கியல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்கு குறைவாகவும், எழுத, படிக்கத் தெரிந்த, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாடியிலுள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் - 621212 என்ற முகவரியில் அல்லது 04328-277896, 9488840328 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT