பெரம்பலூர்

போஸ்டா் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி பாமக புகாா்

DIN

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, பெரம்பலூா் நகரில் போஸ்டா் ஒட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையிலான கட்சியினா் பெரம்பலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:

பெரம்பலூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் சீா்மரபினா் நலச்சங்கம் மற்றும் டி.என்.டி சமூகங்கள் சாா்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்திய தமிழக அரசுக்கு நன்றி என போஸ்டா் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு, நீதிமன்றம் மேற்படி இட ஒதுக்கீடு சம்பந்தமாக தடை விதித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதபட்சத்தில் பொதுமக்கள் மத்தியிலும், வன்னியா் சமூக மக்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தவும், மோதலை உருவாக்கவும் போஸ்டா் ஒட்டியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT