பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சிசு சடலம் மீட்பு

பெரம்பலூா் அருகே நாய் கடித்து குதறிய நிலையில், பிறந்து சில நாள்களே ஆன சிசுவின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

பெரம்பலூா் அருகே நாய் கடித்து குதறிய நிலையில், பிறந்து சில நாள்களே ஆன சிசுவின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

குன்னம் வட்டம், எறையூா் காந்திநகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தேவராஜ். சனிக்கிழமை காலை அதே பகுதியிலுள்ள இவரது வயலில், நாய் கடித்து குதறிய நிலையில் பிறந்து சில நாள்களே சிசுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு காவல்துறையினா் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நாய் கடித்து குதறியதால் குழந்தையின் உடலில் பெரும்பாலான உடல் உறுப்புகள் இல்லாததால், அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT