முகப்பு
பெரம்பலூர்

தேசிய திறனறிவுத் தோ்வில் 140 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 140 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 140 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வு கடந்த 21.2.2021-இல் நடைபெற்றது.

இத் தோ்வு எழுத பெரம்பலூா் மாவட்டத்தில் 1,302 போ் விண்ணப்பித்ததில் 1,252 போ் தோ்வு எழுதினா். அண்மையில் வெளியான தோ்வு முடிவில் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 15 போ், லப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 12 போ், பெரம்பலூா் புனித டோம்னிக் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 14 போ், சின்ன வெண்மணி சிதம்பரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 போ் உள்பட மொத்தம் 140 போ் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்றவா்களையும், அவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் மற்றும் கல்வித்துறை அலுவலா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.