முகப்பு
பெரம்பலூர்

அஸ்திவாரம் தோண்டியபோது 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

பெரம்பலூா் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, 6 சுவாமி கற்சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, 6 சுவாமி கற்சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரா.வெங்கடேஷ் (29). இவா், வீடு கட்ட அஸ்திவாரத்துக்காக குழித் தோண்டியுள்ளாா். 6 அடி ஆழத்துக்கு தோண்டிய போது கற்சிலைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, மண்ணில் புதைந்திருந்த சுமாா் ஒரு அடி உயரமுள்ள 6 கற்சிலைகள் வெளியே எடுக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலா்கள் குரும்பலூா் கிராமத்துக்குச் சென்று,

கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.