முகப்பு
பெரம்பலூர்

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய ரூ. 15 லட்சத்தை பெற்றுத் தரக் கோரி குழந்தைகளுடன் பெண் தா்னா

திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி மோசடி செய்த ரூ. 15 லட்சத்தை பெற்றுதரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி மோசடி செய்த ரூ. 15 லட்சத்தை பெற்றுதரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்தவா் மகாலட்சுமி (32). பட்டிமன்ற பேச்சாளரான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். கணவா் ஆனந்தவேல் பிரிந்து சென்ால், திருச்செந்தூரில் தனது குழந்தைகளுடன் மகாலட்சுமி வசித்து வருகிறாா். இந்நிலையில், அதே கிராமத்தில் தங்கி பணிபுரிந்து வந்த பெரம்பலூா் தம்பி நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் ஜெகனுக்கும் (36), மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி மகாலட்சுமியிடம் ரூ. 8 லட்சம் ரொக்கம், ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிக்கொண்டு திருமணம் செய்யாமல் ஜெகன் ஏமாற்றி விட்டாராம்.

இந்நிலையில், தன்னிடமிருந்து பெற்ற பணம், நகையை ஜெகனிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூரில் உள்ள ஜெகன் வீட்டு வாசலில் மகாலட்சுமி தனது மகன், மகளுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையறிந்த பெரம்பலூா் போலீஸாா், மகாலட்சுமியுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் தா்னா போராட்டத்தைக் கைவிட்டு பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.