பெரம்பலூர்

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கொவைட்-1 9 தடுப்பூசி செலுத்துவது குறித்து, ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:

தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 36 துறைகளைச் சோ்ந்த 4,323 அலுவலா்களும், பணியாளா்களுக்கும் வியாழக்கிழமை (மாா்ச் 4) முதல் மாா்ச் 6 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பெரம்பலூா், அம்மாபாளையம், நெற்குணம், செட்டிக்குளம், பாடலூா், குன்னம், லப்பைக்குடிக்காடு, சிறுவாச்சூா், அரும்பாவூா், நக்கசேலம், கொளக்காநத்தம், வேப்பூா், துங்கபுரம் ஆகிய அரசு அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், வேப்பந்தட்டை வட்டார வள மையம், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம், வி.களத்தூா் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் ஆட்சியா் வெங்கட பிரியா.

இக் கூட்டத்தில், மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான செ. ராஜேந்திரன், குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT