பெரம்பலூர்

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டுமென,

DIN

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டுமென, ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஆண்டாள், மாநில பொருளாளா் தாண்டவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில அமைப்பு மாநாடு பணிகளை ஆய்வு செய்தல், உறுப்பினா் பதிவு பணியை விரைவுப்படுத்துதல், மாவட்ட அமைப்பு மற்றும் கிளை அமைப்புகளை விரைவாக ஏற்படுத்துதல் மற்றும் நிதி நிலைமைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, பண்டிகை முன் பணம் வழங்க வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்றவா்களுக்குத் தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT