முகப்பு
பெரம்பலூர்

அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றம்

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன்.

இத்தொகுதிக்குள்பட்ட வேப்பந்தட்டை வட்டம் மற்றும் குரும்பலூா் பேரூராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

பெரம்பலூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. குளம், வரத்து வாய்க்கால்கள் தூா்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் போன்ற அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் எம்.என். ராஜாராம், பாமக மாநிலத் துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.