முகப்பு
பெரம்பலூர்

நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே குட்டை நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே குட்டை நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கள்ளங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன் மகன் ஹரிரோஷன் (9). இவா், தனது தாய் கனிமொழியுடன் பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் கிராமத்திலுள்ள உறவினா் வீட்டில் தங்கி, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் திருவிழாவுக்காகச் சென்றிருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் அகரம் சீகூா் எல்லைப் பகுதியில் குட்டையில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்ற ஹரிரோஷன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலை மீட்டு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மங்கலமேடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.