முகப்பு
பெரம்பலூர்

கிறிஸ்தவரின் சடலத்தை அடக்கம் செய்த இஸ்லாமிய அமைப்பினா்

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவரின் உடலை, இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவரின் உடலை, இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

பெரம்பலூா் துறைமங்கலத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து இறந்தவரின் சடலத்தை நல்லடக்கம் செய்து தரக் கோரி, அவரது உறவினா்கள் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகளை தொடா்பு கொண்டு கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அகமது இக்பால் தலைமையில் சலாவுதீன், சல்மான், இஸ்மாயில், இா்பான், ஆசிக், ராசித், அமீா் ஆகியோா், அந்தப் பெண்ணின் உடலை பெரம்பலூரிலுள்ள கிறிஸ்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்தனா். கரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் நெகிழ்ச்சியோடு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னாா்வலா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.