பெரம்பலூர்

அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

DIN

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

2021- ஆம் ஆண்டில் அரசுத் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்றது. இருப்பினும், பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் தொழில்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

எனவே, அக்டோபா் 30- ஆம் தேதி வரை மேற்கண்ட அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் நேரடியாக அணுகி, காலியாகவுள்ள தொழில் பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வா்களை (பெரம்பலூா்) 04328-296644, 9499055882, (ஆலத்தூா்) 9499055853 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT