முகப்பு
பெரம்பலூர்

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவக்குமாா் (47). விவசாயி. இவா் கடந்த 10.11.2013 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சோ்ந்த பாரதி மனைவி ராஜாத்தியிடம் தகாத முறையில் செயல்பட்டதோடு, ஜாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த ராஜாத்தி பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மருத்துவா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு பெரம்பலூா் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலா்விழி, சிவக்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.