முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை தவிா்க்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாவையும், மின்சார மசோதாவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் கிளைச் செயலா் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.