முகப்பு
பெரம்பலூர்

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் தா்னா

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் குமரன் குடில், குமரன் லே அவுட் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கோரி உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி வியாழக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினா். மேலும், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, வட்டாட்சியா் மோகன்ராஜ், தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் ஆகியோா் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் பொது குடிநீா்க் குழாய் அமைப்பதற்கும், மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் கட்டுவதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கின. மேலும், புதிய தெருவிளக்குகளும் போடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.