முகப்பு
தமிழ்நாடு

திமுக 165+ (உதய சூரியன் 175+) தொகுதிகளில் போட்டி! யாருக்கு எவ்வளவு?

திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பற்றி...

Updated On : 24 மார்ச் 2026, 1:28 pm IST
மு.க. ஸ்டாலின் - DMK
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகம் நேரடியாக 165 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக - 4, மமக - 2, கொமதேக - 2, ஐயூஎம்எல் - 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், நீண்ட இழுபறிக்கு பின்னர், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகளும், இன்று விடுதலை சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவுடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு 8 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மக்கள் நீதி மய்யம் தனிச் சின்னத்தில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் இரு தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, மதிமுக ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும், 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதேபோல், கொமதேக, மமக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

மேலும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவர் கருணாஸ், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர்கள் நேரடியாக 166 தொகுதிகள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 10 தொகுதிகள் என மொத்த 176 பேர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர்கள் நேரடியாக 173 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 9 தொகுதிகளிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

summary

DMK contests in 165+ (Udaya Suryan 175+) constituencies! Who gets what?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments