பெரம்பலூர்

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

DIN

பெரம்பலூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான  சிறப்பு உதவி ஆய்வாளா் பெரியசாமி, தலைமைக் காவலா் மருதமுத்து ஆகியோா் கேந்திர வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். 

இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT