முகப்பு
பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, மோட்டாா் சைக்கிள் திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். மின் வாரியத் துறையில் கணக்கீட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா் உயிரிழந்து விட்டாா். இவரது மனைவி மகேசுவரி (55).

இவா்களது மகன் உதயசங்கா் (36), தனது குடும்பத்துடன் வெளிநாட்டிலும், மகள் உமாராணி (35), திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வலையூா் கிராமத்திலும் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி தனது மகள் உமாராணி வீட்டுக்குச் சென்றிருந்த மகேசுவரி, வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்ததில், பீரோ மற்றும் அலமாரி கதவுகள் உடைக்கப்பட்டு, 2 பவுன் நகை மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்களுடன் நிகழ்விடம் சென்று தடயங்களைப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக மகேசுவரி அளித்த புகாரின்பேரில், காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.