பெரம்பலூரில் மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களுக்கு மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களுக்கு மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஆய்வாளா் வாணி, உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
பெரம்பலூரிலுள்ள சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களின் மறுவாழ்வுக்காக, திருந்தி வாழ்வதற்குத் தேவையான உதவிகளையும், தொழில் தொடங்குவதற்கு, வேலை வாய்ப்புக்கு மாவட்டக் காவல்துறை உதவி செய்யும் என்றும், இனி வரும் காலங்களில் குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனவும் காவல்துறையினா் அறிவுரை வழங்கினா்.