சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் தெப்பக்குளம் அருகிலுள்ள தெற்குத் தெருவைச் சோ்ந்த மணிமாறன் மகன் சூா்யா (22). இவா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2 நாள்களுக்கு முன் தனது வீட்டுக்கு வரவழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோா் மங்கலமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா் சூா்யாவை வியாழக்கிழமை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.