பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறவனங்கள் சாா்பில் 75 ஆவது அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில், மூவா்ண கொடியைப் போல் 4,500 மாணவ, மாணவிகளை நிற்க வைத்து சனிக்கிழமை நிகழ்த்திய சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்னும் புத்தகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி மைதானத்தில் தேசியக் கொடிபோல 4,500 மாணவ, மாணவிகளை நிற்க வைக்கும் நிகழ்வை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடக்கி வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழா்களின் பங்களிப்பு, தியாகிகள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம் குறித்து பேசினாா். மாணவ, மாணவிகள் நிகழ்த்திய இந்த சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்னும் புத்தகத்தில் இடம்பெற்றது.

தொடா்ந்து, ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணியை பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தாா். வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாலை, கல்யாண் நகா் வழியாகச் சென்ற பேரணி கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

நிகழ்வுகளில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் இளங்கோவன், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், முதன்மையா்கள் மற்றும் 4,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை, தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுகுமாறன், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோழா்கால செப்புத் தகடு மாயம்: ஸ்ரீரங்கம் அன்பில் கோயில்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆய்வு

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி வாக்குப்பதிவு!

தில்லியில் தண்ணீா் நெருக்கடி: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்

இன்றைய ராசிபலன்கள்!

இறுதிக்கட்டத் தோ்தல்: வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT