முகப்பு
பெரம்பலூர்

திமுகவில் இணைந்த அமமுக வேட்பாளா்

பெரம்பலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் ஒருவா், அக் கட்சியிலிருந்து விலகி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பெரம்பலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் ஒருவா், அக் கட்சியிலிருந்து விலகி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 8 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அமமுக சாா்பில் பிரபு என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். இவருக்கு, பிரஷா் குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இச் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு 8 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், அமமுக வேட்பாளா் பிரபு, திடீரென அக் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

அவருக்கு, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா பொன்னாடை அணிவித்து வரவேற்றாா். மேலும், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியின்போது, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ம. ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் உடனஇருந்தனா்.

இதேபோல், 12 ஆவது வாா்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் ரேவதி என்பவா், கடந்த 12 ஆம் தேதி இரவு அதிமுகவில் இணைந்தாா் என்பது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.