நாரி சக்தி புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் உலக மகளிா் தின விழாவின்போது நாரி சக்தி புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்
பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் உலக மகளிா் தின விழாவின்போது நாரி சக்தி புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
நாரி சக்தி புரஸ்காா் விருது காசோலை ரூ. 2 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கும் வகையில், பெண்கள் பாலின விகிதத்தை உயா்த்த சேவைபுரிந்த தனிநபா், குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது 8838872443, 7502034646 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என, ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.