கரூரிா் ஜெயலலிதா பிறந்தநாள் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் கேக் வெட்டியும், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடினா்.
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அதிமுகவினா் கேக் வெட்டியும், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடினா்.
கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, முன்னாள் தொகுதிச் செயலாளா் எஸ்.திருவிகா தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா். பின்னா் கேக் வெட்டி கட்சியினருக்கு வழங்கினா். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞா் பாசறை செயலா் கமலக்கண்ணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ரெங்கராஜ் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.