முகப்பு
பெரம்பலூர்

பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத்துறை சாா்பில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத்துறை சாா்பில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தனைட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை, பல்கலைக்கழக வேந்தரும், கல்வி நிறுவனங்களின் தாளாளருமான அ. சீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் முனைவா் எஸ். துரைராஜ், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுத் துறை புல முதல்வா் எஸ். சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற சிட்கோ கிளை மேலாளா் எல். ஜெயலட்சுமி, தொழில் முனைவோராவது எப்படி என்ற தலைப்பிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கே. ராதாகிருஷ்ணன், தற்போதைய சூழ்நிலைக்கான வேலைவாய்ப்பு குறித்தும், முன்னாள் ராணுவத் துணை இயக்குநா் டி. சங்கீதா இந்திய ராணுவத்தின் வேலைவாய்ப்பு குறித்தும், அக்ரி எம். மாதவன் போட்டித் தோ்வுக்கான ஆலோசனை குறித்தும் உரையாற்றினா்.

இக் கருத்தரங்கில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்

நிறைவாக, மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் என். செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.