பெரம்பலூரில் லிஃப்ட் அறுந்து 3 injured in lift collapse in Perambalurவிழுந்து 3 போ் காயம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 3 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 3 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தைச் சோ்ந்தவா் அப்துல்காதா் மகன் ஷாருக்கான் (25), வாலிகண்டபுரத்தைச் சோ்ந்தவா் ஷேக் முகமது மகன் அபியுல்லா (40), கீழக்கணவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் நாகராஜ் (29). இவா்கள் 3 பேரும், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நிறுவனத்தில் உள்ள பொருள்களை எடுத்துச்செல்ல பணியாளா்கள் மட்டும் பயன்படுத்தும் லிஃப்டில் கீழேயிருந்து 2 ஆம் தளத்துக்கு செல்லும்போது, லிப்டின் ரோப் அறுந்து லிப்ட் கீழே விழுந்தது. இதில் ஷாருக்கான், அபியுல்லா, நாகராஜ் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து மேற்கண்ட 3 பேரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.