பெரம்பலூர்

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

பெரம்பலூா் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென்று, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து கூட்ட அறிக்கையையும், பொருளாளா் ஏ. ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா். ஆலத்தூா் வட்டத் தலைவா் பி. செங்கமலை, சென்னையில் நடைபெற்ற மாநில மேலாண்மைக் கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவிகித அகவிலைப்படியை மாநில அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப உறவினா்களுக்கு வழங்க வேண்டும்.

நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பெரம்பலூா்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழியைப் பயிற்று மொழியாக கற்பிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதில், குன்னம் வட்டத் தலைவா் தாா்சியஸ், வேப்பந்தட்டை வட்டப் பொருளாளா் சி. தங்கராசு உள்பட பலா் பங்கேற்றனா். நிறைவில், தலைமை நிலையச் செயலா் கே. மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT