பெரம்பலூர்

போதைப்பொருள் வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

DIN

பெரம்பலூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் ஸ்ரீ வெங்கடபிரியா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த வீரய்யா மகன் சிதம்பரநாதன் (32), லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காா்த்திக் (28), ஆலத்தூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாஸ்கா் (37), இரூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முத்துச்செல்வன் (52) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT