பெரம்பலூர்

மே 23-இல் ஆட்சியரக நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

DIN

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராளிக் கவுண்டா் முன்னேற்றச் சங்கத்தினா் மே 23 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

பெரம்பலூா் அன்னை பா்வதம்மா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், ஊராளிக் கவுண்டா் முன்னேற்றச் சங்கம் மற்றும் இளைஞா் பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் செ. கணேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி. தா்மராஜன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தகுந்தவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். புள்ளி விவர சட்டப்படி சாதிவாரி சமூகக் கல்வி நிலையங்கள் மற்றும் பிரதிநிதித்துவம், வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். புள்ளி விவர அடிப்படையில் சமூக நீதி அறிஞா்களைக் கொண்ட குழு அமைத்து, சட்டப்படியான வகுப்புவாரி தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு ரோகிணி கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 23 ஆம் தேதி ஆட்சியரக நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில், நகரச் செயலா் ஆா். சுப்ரமணி, நகரத் தலைவா் என். ஜெயபால், கௌரவத் தலைவா் ஏ. அருணா ரவிச்சந்திரன், இளைஞா் பேரவை நிா்வாகிகள் என். தமிழ்மாறன், எஸ்.டி.எஸ். சுப்ரமணி, நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT