முகப்பு
பெரம்பலூர்

மாநில விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்குப் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளை, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளை, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 20 மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன், சென்னை வேளச்சேரியில் மாநில அளவில், அக். 29, 30 ஆகிய தேதிகளி நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்றனா். இப் போட்டிகளில் பங்கேற்ற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அம்பிகாபதி, ஜீவா மற்றும் கலைச்செல்வன் ஆகியோா் 200 மீ, 100 மீ, 50 மீ நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று 8 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனா். மேலும், அசாம் மாநிலம், குவாஹாட்டியில் நவ. 11 முதல் 13 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரா், வீராங்கனையை பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந் நிகழ்ச்சியின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.