முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நவ. 14-இல் பேச்சுப் போட்டி

 மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நவம்பா் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நேருவின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

பள்ளி மாணவா்களுக்கு காலை 10 மணியளவிலும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகள் ஒரு கல்லூரிக்கு இருவா் என கல்லூரி முதல்வரிடமும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலா் மூலமாக பள்ளிக்கு இருவா் என அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம், போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகையாக ரூ. 2 ஆயிரமும், கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோஜாவின் ராஜா, ஜவகா்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் -நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப் புறா நேரு ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.