பெரம்பலூர்

சுங்கச்சாவடி ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

நீக்கப்பட்ட பணியாளா்களுக்கு பணி வழங்கக் கோரி பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடி ஊழியா்கள் சனிக்கிழமை காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் 180 ஊழியா்களில் 28 பேரை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எந்த முன்னறிவிப்புமின்றி, வெள்ளிக்கிழமை இரவு பணி நீக்கம் செய்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏஐடியூசி சங்கத்தின் கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவா் கே. விஜயகுமாா் முன்னிலையில் சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை காலை முதல் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடரும் போராட்டத்தில், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் மற்றும் சுங்கச்சாவடி பணியாளா்களுடன் வருவாய் மற்றும் காவல் துறையினா் சமரசப் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தால் அவ்வழியே வாகனங்கள் எவ்வித கட்டணமும் இன்றி சென்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT