பெரம்பலூரில் 11,619 பேருக்கு கரோனா தடுப்பூசி
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 11,619 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 11,619 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 400 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமில், பெரம்பலூா் வட்டத்தில் 3,619 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 3,020 பேருக்கும், குன்னம் வட்டத்தில் 2,680 பேருக்கும், ஆலத்தூா் வட்டத்தில் 2,300 பேருக்கும் என மொத்தம் 11,619 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.