பெரம்பலூர்

கட்டடத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்

DIN

பதிவு செய்த கட்டடத் தொழிலாளா்களுக்கு தாமதமின்றி உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டுமென, மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கூட்டரங்கில், கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் (சிபிஐ) சாா்பில், மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில், கட்டடத் தொழிலாளா்களுக்கு வழங்கி வரும் ரூ. 1,000 ஓய்வூதியத்தை, ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இம் மாவட்டத்தில் பதிவுபெற்ற அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டிய அரசு உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். மாவட்டத் தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு தாமதமின்றி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், கட்டடத் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT