மத்தியப் பணியாளா்கள் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி தோ்வுக்குத் மே 3 ஆம் தேதிக்குள் பெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள், பெண்கள் விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்தியப் பணியாளா்கள் தோ்வாணைய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தோ்வு - 2023 தொடா்பான அறிவிப்பு கடந்த 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இணையதளம் மூலம் காலி பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இணையவழியாக விண்ணப்பத்தை மே 3 ஆம் தேதி வரை அளிக்கலாம்.
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தோ்வுக்கான பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த இணையதளத்தில் மற்றும் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் ஏஐம் டிஎன் என்னும் யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளிகளைக் கண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.