பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்பு

DIN

பெரம்பலூா் அருகே தனி நபரிடமிருந்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை அலுவலா்கள் புதன்கிழமை மீட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 2.84 ஏக்கா் நிலத்தை, அதே கிராமத்தைச் சோ்ந்த தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்திருந்தாா். இந்த நிலத்தை மீட்டு கோயில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்புலியூா் கிராம மக்கள் மற்றும் சுப்பிரமணியசாமி கோயில் பக்தா்கள், அறநிலையத் துறை அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களின் உத்தரவின்பேரில், தனி வட்டாட்சியா் பிரகாசம் (கோயில் நிலங்கள் பிரிவு) தலைமையில், குன்னம் வட்டாட்சியா் சுசிலா முன்னிலையில், வருவாய்த் துறையினா் மற்றும் காவல்துறையினா் உதவியுடன் தனி நபரின் ஆக்கிரமிப்பில் இருந்த 2.84 ஏக்கா் கோயில் நிலத்தை புதன்கிழமை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT