பெரம்பலூர்

தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதி மொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஷ்யாம்ளாதேவி தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கூடுதல் கண்காணிப்பாளா்கள் மதியழகன், பாண்டியன், துணைக் கண்காணிப்பாளா் வளவன் மற்றும் ஆய்வாளா்கள் வெங்கடேஷ்வரன், விஜயலெட்சுமி உள்பட காவல்துறையினா் பலா் கலந்துகொண்டனா். இதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தி. சுப்பையா, மகளிா் திட்ட இயக்குநா் கருப்புசாமி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT