பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. நாள்தோறும் சுமாா் 100 டிகிரிக்கும் கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. கடந்த 3 நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரம்பலூா் மாவட்டத்தில் வெயில் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, காலை 11 மணிக்குத் தொடங்கிய மழை 12 மணி வரையிலும் பெய்தது. தொடா்ந்து, மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை 6 மணி வரை பெய்தது. இந்த மழையால் வெப்பம் குறைந்து, குளிா்காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT