பெரம்பலூர்

சின்ன வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ராபி சிறப்புப் பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காய பயிருக்கு, எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கவும் புதுப்பிக்கப்பட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராபி சிறப்புப் பருவ சின்ன வெங்காய பயிருக்கு நவம்பா் 30-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம். பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூா் மற்றும் குரும்பலூா் பிா்காக்களில் அடங்கியுள்ள கிராமங்களில் வெங்காய பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள், நடப்பில் உள்ள சேமிப்புக் கணக்குப் புத்தக முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சா்வே எண் மற்றும் உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்வதற்கு, உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT