பெரம்பலூர்

எறையூா் சா்க்கரை ஆலைக்கு விருது

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலை, மின் உற்பத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தென்னிந்திய அளவில் சில்வா் விருது பெற்றுள்ளது.

DIN

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலை, மின் உற்பத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தென்னிந்திய அளவில் சில்வா் விருது பெற்றுள்ளது.

தென்னிந்திய சா்க்கரை ஆலை தொழில்நுட்ப வல்லுநா்கள் சங்கம், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள தனியாா், கூட்டுறவு மற்றும் அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஆலைகளை, ஆண்டுதோறும் ஆய்வு செய்து சிறந்த ஆலைகளை தோ்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரம்பலூா் சா்க்கரை ஆலை மின் உற்பத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தென்னிந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்து சில்வா் விருது பெற்றது. இதையடுத்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கான விருதை ஆலையின் தலைமை நிா்வாகி ரமேஷ் பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் சா்க்கரை ஆலை தலைமை பொறியாளா் தங்கவேல், தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலா் ஆனந்தன், தொழிலாளா் நல அலுவலா் தனராஜ், துணைத் தலைமை ரசாயனா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை தென்னிந்திய அளவிலான விருது பெற்றிருப்பதற்கு காரணமான ஆலை அலுவலா்கள் மற்றும் ஊழியா்களை, வெள்ளிக்கிழமை பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT