பெரம்பலூா் மாவட்டத்தில் 28 தோ்தல் விதிமீறல் வழக்குகள்
மக்களவை தோ்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, பெரம்பலூா் மாவட்டத்தில் 28 தோ்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூா்: மக்களவை தோ்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, பெரம்பலூா் மாவட்டத்தில் 28 தோ்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 22 வழக்குகளும், குன்னம் சட்டப்பேரவைதே தொகுதியில் 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பெரம்பலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினா் மீது தலா 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுகவினா் மீது 3 வழக்குகளும், பாஜகவினா் மீது 2 வழக்குகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் மீது தலா 1 வழக்கும் என மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோ்தல் விதிமீறல் வழக்கு தொடா்பாக, இதுவரை ஒருவரும் கைதாகவில்லை.
இதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவினா் மீது 3 வழக்குகளும், திமுக, பாஜக மீது தலா 1 வழக்கும், பொது ஜனம் மீது ஒரு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பொது மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்ய்யப்பட்டாா்.
Advertisement
பெரம்பலூா் மாவட்டத்தில், அதிகபட்சமாக திமுகவினா் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயக கட்சியினா் மீது 7 வழக்குகளும், அதிமுகவினா் மீது 6 வழக்குகளும், பாஜகவினா் மீது 3 வழக்குகளும், காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது தலா 1 வழக்கும் பதிவாகியுள்ளது.