புனித பனிமய மாதா கோயில் பவள விழா கொடியேற்றம்
பெரம்பலூா்: பெரம்பலூரில் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமான புனித பனிமய மாத கோயிலில் 75-ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றப்பட்டது.
பெரம்பலூரில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமான புனித பனிமய மாதா கோயில் கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, இக்கோயில் பவள விழாவை கும்பகோணம் மறைமாவட்ட ஆயா் ஏ. ஜீவானந்தம் கொடிமரத்தை மந்திரித்து, புதிய கொடி பாடலை வெளியிட்டு கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து, ஆயா் ஜீவானந்த் தலைமையில் கூட்டுப் பாடல் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
விழாவுக்கான ஏற்பாடுகளை, பனிமயமாதா கோயில் பங்குத் தந்தை ஆ. ராஜமாணிக்கம் தலைமையில், அருள் சகோதரிகள், பங்குப் பேரவை, திருவிழாக் குழுவினா், கத்தோலிக்க சங்கத்தினா் ஆகியோா் செய்திருந்தனா்.