பெரம்பலூர்

பெரம்பலூரில் அடுத்தடுத்து 4 இடங்களில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

4 இடங்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

Din

பெரம்பலூரில் அடுத்தடுத்து 4 இடங்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் நான்குச்சாலை சநித்ப்புப் பகுதியிலுள்ள செல்வா நகரில் வசித்து வருபவா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ரவிக்குமாா் (61). இவரது மனைவி, துபையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில், ரவிக்குமாா் தெற்குமாதவி கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றிருந்தாா். சனிக்கிழமை காலை வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் வைத்திருந்த 6.5 பவுன் நகைகள், அரை கிலோ எடையுள்ள 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கரா பாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சத்யராஜ் (34). இவா், சிறுவாச்சூா் தெற்குத் தெருவிலுள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியாா் டயா் தாயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சத்யராஜ் தனது குடும்பத்துடன் கொங்கரா பாளையத்துக்கு அண்மையில் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, 3 பவுன் நகைகள், ரூ. 1. 30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

அதேதெருவில் வசித்து வரும் தாசன் மகன் கோவிந்தராஜ், குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 18,500 ரொக்கத்தையும், அருகிலுள்ள அழகேசன் மனைவி கோகிலாவுக்கு சொந்தமான பேன்ஸி பொருள்கள் விற்பனைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து, மேற்கண்ட 4 பேரும் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

Hattrick 100 கோடி!” விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

சிறப்பு தீவிர திருத்தம்: நவ. 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

‘பாட்டா இந்தியா' நிகர லாபம் 73% சரிவு!

நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் மோந்தா புயல்! | செய்திகள்: சில வரிகளில் | 27.10.25

SCROLL FOR NEXT