முகப்பு
பெரம்பலூர்

ஆயுதப்படை காவலா்களுக்கு மருத்துவ முகாம்

காவலர்களின் நலன் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:33 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் (தலைமையிடம்) தலைமை வகித்தாா். முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்களுக்கு கண், காது, பல் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவா்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் சாா்பு -ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement