முகப்பு
பெரம்பலூர்

தொழில்முனைவோா் 455 பேருக்கு கடனுதவிக்கான உத்தரவுக் கடிதம்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 5:32 AM
பகிர்:

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கிக் கடன் முகாமில் 455 தொழில் முனைவோருக்கு ரூ. 23.90 கோடி மதிப்பில் கடனுதவி பெறுவதற்கான உத்தரவுக் கடிதம் வழங்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வங்கிக்கடன் வசதியாக்கல் மற்றும் வங்கிக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) கா. ரமேஷ் கூறியது: தமிழக அரசு, பெரம்பலூா் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக 2023-24- ஆம் ஆண்டில் 31.12.2023 வரையிலான நிதியாண்டில் 7,047 பயனாளிகளுக்கு ரூ. 363 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கியுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து, 455 தொழில்முனைவோருக்கு ரூ. 23.90 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ரமேஷ் வழங்கினா். முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் பி.டி. சுந்தரம், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் ஜெ. பிரபு ஜெயக்குமாா் மோசஸ், வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள், தொழில்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோா் பலா் கலந்துகொண்டனா்.