முகப்பு
பெரம்பலூர்

சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 26 ஜூன், 2024 at 10:58 PM
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா், ஜூன் 26: சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கிய பேரணியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனா்.

பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, கடைவீதி வழியாகச் சென்று மேற்கு வானொலி திடல் அருகே நிறைவடைந்தது. முன்னதாக, போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் கற்பகம் தலைமையில் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைக்கான கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், அஸ்வின்ஸ் இனிப்பக உரிமையாளா் கணேசன், சமூக ஆா்வலா்கள் என். ஜெயராமன், மகேஷ்குமாா், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காவல்துறையினா் மற்றும் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதேபோல, வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகம், பாடாலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் போதைப் பொருள்கள் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.