குரும்பலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சாா்பில், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு காவல் ஆய்வாளா் லதா தலைமை வகித்து பேசினாா். குரும்பலூா் சிவன் கோயில் அருகே தொடங்கிய பேரணி, குரும்பலூரில் உள்ள பிரதான வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா். இதில், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா் பங்கேற்றனா்.