முகப்பு
பெரம்பலூர்

ஆண்டிமடம் அருகே முருகன் சிலை கண்டெடுப்பு

Updated On : 5 மே, 2024 at 6:29 PM
பகிர்:

அரியலூா், மே 5: ஆண்டிமடம் அருகே கோயில் கட்டுமானப் பணியின்போது, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கூவத்தூா் கிராமத்தில் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை அகற்றி, ரூ. 12 கோடியில் புதிய கோயில் கட்டும் பணிகள் அண்மைக்காலமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் சனிக்கிழமை இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது 2 அடி உயரம்கொண்ட வள்ளி, தெய்வானை சமேத முருகன் கற்சிலை கிடைத்தது. இச் சிலை 16 ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சிலையை கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனா்.