முகப்பு
பெரம்பலூர்

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை, அபராதம்

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:04 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், எலந்தங்குழி சீராநத்தம் கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வடிவேலு மகன் மணி (56). இவா் கடந்த 22.6.2020 இல் 12 வயதுச் சிறுமியை தனது வயலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தாா். இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா். பின்னா், மணி நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, மணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, அதைச் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து மணியை கைது செய்த மகளிா் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனா்.